அண்ணாமலை.. இது தரங்கெட்ட செயல்., பத்திரிகையாளர் கண்ணியத்தை உறுதி செய்யுங்க.. பத்திரிகையாளர் மன்றம் அறிவுரை.
தமிழக பாஜக அலுவலகம் முன்பு ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தில் இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
தமிழக பாஜக அலுவலகம் முன்பு ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தில் இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
ஊடகவியலாளர்கள் இன்று (13-10-2022) வியாழன் காலை , தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது பாஜக அலுவலகத்திற்கு வெளியில் சாலையோரம் பெண்மணி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பாக காட்சிகளை எடுத்த ஊடக ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர்களை அங்கிருந்த பாஜகவினர் சிலர் மோசமான வகையில் மிரட்டியுள்ளனர்.
ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியுமுள்ளனர். அருவருப்பான இந்த மிரட்டல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக தமிழக பாஜக தலைவரிடம் முறையிட்டுள்ளனர். அவரும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்
செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களை கண்ணியமாக நடத்தப்படுவதை பாஜக கட்சியின் தலைவர் திரு. அண்ணாமலை உறுதிபடுத்துவதுடன் இன்றைய அருவருப்பான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இனி வருங்காலங்களில் இது போன்ற மோசமான சம்பவங்கள் தொடராமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று கருதுகிறோம்.
நாகரீக சமுகத்தில் ஊடகவியலாளர்கள் மீது மிரட்டல் விடுப்பதும் ஆபாச வார்த்தைகளால் அச்சுறுத்துவதும் தரங்கெட்ட செயல் என்பதை அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம். தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு விதமாக மிரட்டல்கள் தாக்குதல்கள் தொடர்கிறது.
இதையும் படியுங்கள்: இந்துக்களிடமே பொருட்கள் வாங்க வேண்டும்..! நோட்டீஸ் விநியோகித்த இந்து முன்னணி நிர்வாகி..! தட்டி தூக்கிய போலீஸ்
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இத்தருணத்தில் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையின் கூறப்பட்டுள்ளது.