இந்துக்களிடமே பொருட்கள் வாங்க வேண்டும்..! நோட்டீஸ் விநியோகித்த இந்து முன்னணி நிர்வாகி..! தட்டி தூக்கிய போலீஸ்
தீபாவளிக்கு இந்துக்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என நோட்டீஸ் அடித்து விநியோகித்த இந்து முன்னனி நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்து கடைகளில் பொருட்கள்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஜோதிடர் தெருவில் வசிப்பவர் சக்தி. வயது 32. இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் இந்துக் கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என்றும், ஜவுளி ஆனாலும் சரி மளிகை பொருட்கள் ஆனாலும் சரி கம்ப்யூட்டர் முதல் கருவேப்பிலை வரை நாம் வாங்கும் பொருட்கள் இந்துக்கள் கடையிலேயே வாங்க வேண்டும், கடைகளில் இந்து சாமி படம் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்று மதப் பிரிவினை ஏற்படும் வகையில் நோட்டீஸ் ஒட்டியும் சமூக வலைத்தளங்களிலும் தகவலை பரப்பினார். இது தொடர்பாக வழக்கு வெங்கமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமாரிடம் கொடுத்த புகார் கொடுக்கப்பட்டது.
இந்து முன்னனி நிர்வாகி கைது
இதனையடுத்து இந்து முன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி கைது செய்யப்பட்டார். அவரை வெள்ளியணை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். அப்போது, இந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பியதால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணியின் கரூர் நகர செயலாளர் வெற்றியை குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..! உள்துறை அமைச்சரை சந்திக்கிறாரா.?