இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜகவே அதை எதிர்க்கும்... அண்ணாமலை அதிரடி.
இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால் அதை தமிழக பாஜக வன்மையாக எதிர்க்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் யார் இந்து யார் இந்து இல்லை என்று கண்டுபிடிப்பது இப்போது பேஷனாகி விட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்
.
மத்திய அரசு இந்தி மொழித் திணிப்பு செய்தால் அதை தமிழக பாஜக வன்மையாக எதிர்க்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் யார் இந்து யார் இந்து இல்லை என்று கண்டுபிடிப்பது இப்போது பேஷனாகி விட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார். உயர் கல்வி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றிருந்த நிலையில், 12 நாள் பயணம் முடித்து இன்று காலை திரும்பினார். அவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இதையும் படியுங்கள்: தேவர் குருபூஜை.. பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர்.. பிரதமர் வருகை குறித்து பாஜக விளக்கம்..
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை, மாறாக மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்றுதான் கூறுகிறது. இதுதான் மத்திய அரசின் கல்விக் கொள்கை, நான் சொல்கிறேன் இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால் அதை தமிழக பாஜக ஒருபோதும் ஏற்காது, எதிர்க்கும் என்றார், அப்போது ராஜராஜசோழன் ஹிந்து மத சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யார் யார் இந்து, யார் இந்து இல்லை என்பதை கண்டுபிடிப்பது இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது என்றார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: இனி இப்படி ஒரு தற்கொலை நிகழக்கூடாது... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!
இந்தி மொழியை திணித்த காங்கிரஸ் ஆட்சியுடன்தான் திமுக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்தது. திமுகவின் கபட நாடகம் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்றார். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த எனக்கு அங்கு தமிழக மக்களிடம் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. கலிபோர்னியாவில் ஏராளமான தமிழ் மக்களை சந்தித்தேன், பாஜக தமிழகத்தில் இல்லை என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது பாஜகதான் எதிரி என்கிறார், பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே அங்கீகரித்து பேசியுள்ளார். மொத்தத்தில் இந்தி விவகாரத்தை பொருத்தவரையில் இந்தி மொழியை முழுமையாக பயன்படுத்த மாநிலங்கள்A என்றும்,
பாதி அளவு பயன்படுத்தும் மாநிலம் B கேட்டகிரியிலும், இந்தி மொழியை பயன்படுத்தாத மாநிலங்கள் C கேட்டகிரியிலும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது அட்டவணை பிரிவு 8 இருக்கிற மொழிகள் மட்டும்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள், எனவே இந்தியாவில் எந்த தேர்வாக இருந்தாலும் அட்டவணை 8-ல் இருக்கும் மொழிகளில்தான் நடத்த வேண்டும், தமிழகத்தில் ஏதாவது ஒரு தேர்வை இந்தியில் தான் எழுத வேண்டும் என்று கட்டாயமாக சொன்னால், அதை ஒருபோதும் தமிழக பாஜக ஏற்காது எதிர்க்கும். திமுக மக்களுக்கு தேவையான அரசியல் செய்ய வேண்டும், தேவையில்லாததை விட்டுவிட்டு பொய்யான விஷயத்தை கைவிட்டு மக்களுக்கு சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.