அண்ணாமலையின் நிகழ்ச்சிக்கு சென்ற பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் மோதல்..! கமலாலயத்தில் பரபரப்பு
பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வார கால அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு இன்று காலை சென்னை திரும்பினார். இதனையடுத்து அவரை வரவேற்க்க ஏராளமான பாஜக தொண்டர்கள் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கூடியிருந்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்துள்ளனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் பத்திரிக்கையாளர்களுடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இர தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது
இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜகவே அதை எதிர்க்கும்... அண்ணாமலை அதிரடி.
கமலாலயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிக்கையார்கள் முறையிட்டனர். இதனையடுத்து பத்திரிகையாளர் மீது தாக்க முயன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்