பிரிஜ் பூஷன் சரன் சிங் மீதான பாலியல் புகார்: உடற்பயிற்சி செய்து கொண்டே மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரன் சிங் மீதான பாலியல் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உடற்பயிற்சி செய்து தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் பாஜக எம்பியும் கூட. அவரை அந்த பதவியிலிருந்து நீக்கக்கோரியும், நடப்பு மல்யுத்த அமைப்பையே கலைத்துவிட்டு புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து மேரி கோம் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டி விசாரண மேற்கொண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை வரும் வரையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பிலிருந்து 4 வாரங்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக டெல்லி ஜந்தர் மந்திரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் என்ற பஜ்ரங் புனியா,விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
IPL 2023: ஃபர்ஸ்ட் ஆஃப் ஓவர்: இப்போ வரைக்கும் இது மாதிரி தான் தெரியுது!
இந்த போராட்டத்தில் அந்த கட்சி, இந்த கட்சி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி கலந்து கொள்ளலாம் என்று பஜ்ரங் புனியா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உடற்பயிற்சி மேற்கொண்டனர். உடற்பயிற்சி செய்து கொண்டு தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.