IPL 2023: ஃபர்ஸ்ட் ஆஃப் ஓவர்: இப்போ வரைக்கும் இது மாதிரி தான் தெரியுது!
ஐபிஎல் 2023 சீசனின் முதல் பாதி முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ்
அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த 35ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சகா 4 ரன்களில் வெளியேறினாஅர். ஹர்திக் பாண்டியாவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நின்னு நிதானமாக ஆடிய சுப்மன் கில் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மும்பை இந்தியன்ஸ்
அதன்பிறகு வந்த விஜய் சங்கர் 19 ரன்களில் வெளியேறினார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி 12.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் வரையில் எடுத்திருந்தது. பின்னர் வந்த டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் தங்களது பங்கிற்கு கடைசியில் அதிரடி காட்ட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபினவ் மனோகர் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மில்லர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ்
கடைசியாக வந்த ராகுல் திவேதியாக 3 சிக்ஸர்கள் விளாச குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 2, இஷான் கிஷான் 13, திலக் வர்மா 2 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். 7.6 ஓவரில் 3 விக்கெட் இழந்து 45 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.
குஜராத் டைட்டன்ஸ்
கேமரூன் க்ரீன் 33 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த டிம் டேவிட் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா மட்டும் நிலைத்து நின்று ஆடி 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்களான் பியூஷ் சாவ்லா 18 ரன்னிலும், அர்ஜூன் டெண்டுல்கர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மும்பை இந்தியன்ஸ்
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
மும்பையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல்
தற்போது ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசனின் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மட்டும் முதல் 4 இடங்களைப் பெற்றுள்ளன.
எம் எஸ் தோனி
தற்போது வரையில் ஒவ்வொரு அணியும் 7 போட்டிகள் விளையாடியுள்ளன. இதே போன்று ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 7 போட்டிகள் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எந்தெந்த அணிகள் எல்லாம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளனவோ அந்தந்த அணிகள் எல்லாம் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால், இந்த தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.