IPL 2023: விஜய் டயலாக்கை நினைவுபடுத்திய ஹர்திக் பாண்டியா: டி20 வேடிக்கையானது, நான் மனசு சொல்றது கேட்பேன்!
கேப்டன்ஷியை பொறுத்த வரையில் நான் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்பேன் என்று குஜ்ராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ்
தனது கோட்டையாக சொல்லப்படும் அகமதாபாத் மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே சென்னையை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பையை அசால்ட்டாக வீழ்த்து புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. ஆனால், அகமதாபாத் மைதானத்தில் நடந்த 2ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்
அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், தான் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திதது.
குஜராத் டைட்டன்ஸ்
இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: எப்போதும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும். டி20 மிகவும் வேடிக்கையானது. ஓரிரு சிக்ஸர்கள் கூட உங்களது மனநிலையை மாற்றிவிடும்.
குஜராத் டைட்டன்ஸ்
கேப்டன்சி என்பது எனது உள்ளுணர்வை ஆதரிக்கும் ஒன்று. நான் எப்போதும் எனது மனச் சொல்வதை கேட்பேன். எனக்கும், பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கும் ஒரே மனநிலை உள்ளது. அதிகமாக வேகப்பந்துகளில் விளையாடிய கேமரூன் க்ரீன் மற்றும் டிம் டேவிட்டை, ரஷீத் கான் மற்றும் நூர் அஹமது வைத்து ஆட்டமிழக்கச் செய்தோம்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டியை கடைசி வரை கொண்டு செல்லக் கூடாது என்று தீர்மானித்தோம். ஏனென்றால் கடைசி வரை சென்ற போட்டிகள் எங்களுக்கு சாதகமாக இல்லை. அபினவ் மனோகர் ஒவ்வொரு நாளும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்து வருகிறார்.
குஜராத் டைட்டன்ஸ்
அவர் தான் எங்கள் அணியின் சிறந்த டெத் ஓவர் பேட்ஸ்மேன். பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம் என்று கூறியுள்ளார். எப்போதும் மனசு சொல்வதை கேட்பேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியது, விஜய்யின் யூத் பட டயலாக்கையும், ரஜினிகாந்தின் பாட்ஷா பட டயலாக்கையும் நினைவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 29ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.