Asianet News TamilAsianet News Tamil

மாஸ்டர் லுக்கில் விம்பிள்டன் சாம்பியன்: வைரலாகும் டுவிட்டர் போஸ்ட்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து மாஸ்டர் லுக்கில் கார்ல்ஸ் இருப்பது போன்ற ஒரு போஸ்டர் விம்பிள்டன் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Wimbledon Champion Carlos Alcaraz look like thalapathy vijay master movie poster
Author
First Published Jul 17, 2023, 5:36 PM IST

கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்க்கெட்டா வோட்ரூசோவா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். இந்த நிலையில், நேற்று உலகமே எதிரபார்த்து காத்திருந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடந்தது. இதில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ்  அல்காரஸ் மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் இருவரும் மோதினர்.

ரூ.100 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த பேட் ஸ்பான்சர்ஷிப் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்று கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல்காரஸ் 2ஆவது செட்டை 7-6 என்று கைப்பற்றிய நிலையில், 3ஆவது செட்டையும் 6-1 என்று வென்றார். இதையடுத்து 4ஆவது செட்டை ஜோகோவிச் 6-3 என்று கைப்பற்றினார். இதன் காரணமாக சாம்பியனை தீர்மானிக்கும், கடைசி செட் வரையிலும் போட்டி விறுவிறுப்பாக சென்றது. இதில், கார்லஸ் அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

அயர்லாந்து தொடருக்கு டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளருக்கு ஓய்வு; களமிறங்கும் விவிஎஸ் லட்சுமணன்!

இதன் மூலமாக 4 முறை விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்ற ஜோகோவிச் இந்த முறை 20 வயது நிரம்பிய வீரரிடம் பரிதாபமாக தோல்வி அடைந்தார். இதற்கு முன்னதாக ஜோகோவிச் 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதோடு, 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியிருக்கிறார். இந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்டர் போன்று கார்லஸ் அல்காரஸ் வாயில் விரல் வைத்து அமைதி என்று சொல்வது போன்ற ஒரு போஸ்டரை விம்பிள்டன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் தான் டிரெண்ட் ஆகி வருகிறது.

டெஸ்ட் வரலாற்றில் சிறந்த சுழல் ஜோடி; 495 விக்கெட்டுகள் எடுத்து சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios