நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3; வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்ற ஒரு பில்லியன் நம்பிக்கையுடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Will R Praggnanandhaa win by the time Chandrayaan 3 lands on the moon?

செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா மோதுகின்றன. இந்தப் போட்டி இரண்டு ஆட்டங்கள் கொண்டதாக இன்றும், நாளையும் நடக்கிறது. இரண்டு ஆட்டங்களின் முடிவில் வெற்றியாளர் இல்லை என்றால், இறுதிப் போட்டி டை-பிரேக்கர்களுக்குச் செல்லும்.

இரண்டு போட்டிகள் கொண்ட செஸ் இறுதிப் போட்டி தொடங்கியது – பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன் பலப்பரீட்சை!

இந்தியாவின் நிலவு பணியான சந்திரயான் 3 தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாளாகவும் புதன்கிழமை உள்ளது. சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் போது 18 வயது இளைஞன் உலகளாவிய நிகழ்வில் வெற்றி பெற்றால் அது முக்கியமானதாக இருக்கும் என்று செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.

யார் இந்த பிரக்ஞானந்தா, படைத்த சாதனைகள் என்னென்ன?

இளம் வீரரான பிரக்ஞானந்தா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர். இது இரண்டு கேம் மேட்ச், இன்றும், நாளையும் அவர் விளையாடுவார். எனக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் முதல் இந்தியராக பிரக்ஞானந்தா இருக்க கூடும். அதுவும் இந்த நாள் விசித்திரமான நாளாக இருக்க கூடும். ஏனென்றால், சந்திரயான் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

World Cup 2023: உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது – கங்குலி!

பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் பல்வேறு போட்டிகளில் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். ஆனால், குறைவான போட்டிகளில் மட்டுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், கிளாசிக்கல் செஸ்ஸில் இருவரும் ஒரு போட்டியி மோதியுள்ளனர். அந்தப் போட்டியானது டிராவில் முடிந்தது. ரேபிட்/எக்ஸிபிஷன் கேம்களில், கார்ல்சென் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆறு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. என்னதான் கார்ல்சன் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், சமீபத்திய முடிவுகள் எல்லாம் பிரக்ஞானந்தாவிற்கு சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன் மீண்டும் உதிக்கும் - இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் பதிவு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios