இரண்டு போட்டிகள் கொண்ட செஸ் இறுதிப் போட்டி தொடங்கியது – பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன் பலப்பரீட்சை!
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி தொடங்கி தற்போது நடந்து வருகிறது.
அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற பகுதியில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது வரும் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், குகேஷ், விதித் குஜராத்தி, ஆர் பிரக்ஞானந்தா, நிகால் சரின், சுனில்தத் லைனா நாராயணன் ஆகியோர் உள்பட மொத்தமாக 206 செஸ் பிளேயர்ஸ் இடம் பெற்றனர்.
யார் இந்த பிரக்ஞானந்தா, படைத்த சாதனைகள் என்னென்ன?
இந்த நிலையில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர் பிரக்ஞானந்தா, உலக தரவரிசைப் பட்டியலில் 3ஆவது நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். இதில், பிரக்ஞானந்தா ஒயிட் காயின்களுடன் விளையாடினார். 47ஆவது மூவின் போது போட்டியானது டிரா செய்யப்பட்டது.
World Cup 2023: உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது – கங்குலி!
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில், பிரக்ஞானந்தா 3.5-2.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இரண்டு ஆட்டங்கள் கொண்ட இறுதிப் போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி தற்போது தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
இரண்டு ஆட்டங்கள் கொண்டதாக நடக்கும் இறுதிப் போட்டியின் முடிவில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை என்றால், டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் மீண்டும் உதிக்கும் - இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் பதிவு!