சூரியன் மீண்டும் உதிக்கும் - இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் பதிவு!

சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Yuzvendra Chahal twitter post goes viral in social media

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் விளையாட இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.

World Cup 2023: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மா? அஜித் அகர்கர் பதில்!

ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியை இந்திய அணி நம்பியிருந்தது இருவரும் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி தங்களது உடல் தகுதியை நிரூபித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், நேற்று ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், யுஸ்வேந்திர சஹால் இடம் பெறவில்லை.

இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார் – பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

Praggnanandhaa: டை பிரேக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா!

சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், தான் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மேகமூட்டத்துடன் காணப்படும் சூரியனானது மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என்பது போன்று பதிவிட்டிருக்கிறார்.

Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios