World Cup 2023: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மா? அஜித் அகர்கர் பதில்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மா இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பைக்காக இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. முதல்கட்டமாக வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை,நேபாள், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என்று 6 அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடுகின்றன. கண்டி மற்றும் கொழும்புவில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார் – பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்!
இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாகத்தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட அணி இடம் பெற வேண்டும் என்பதால், 2 வீரர்கள் நீக்கப்படுவார்கள்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் விளையாடி 173 ரன்கள் குவித்த திலக் வர்மாவும் இடம் பெற்றுள்ளார். திலக் வர்மா காரணமாக சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக இடம் பெற்றிருக்கிறார். திலக் வர்மா மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவார், அதுமட்டுமின்றி தேவைப்படும் போது கூட பந்தும் வீசுவார்.
Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு!
ஆனால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியிருப்பதாவது: தனது சிறப்பான பேட்டிங் திறைமையை வெளிப்படுத்தி எல்லோரது நம்பிக்கையையும் பெற்றார். ஆசியக் கோப்பைக்கு 17 வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால், அவரையும் தேர்வு செய்துள்ளோம்.
Jailer: ரஜினியின் தீவிர ரசிகர்; அயர்லாந்தில் ஜெயிலர் படம் பார்த்த சஞ்சு சாம்சன்!
இந்திய அணியுடன் இருப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒருவேளை உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மா இடம் பெற்றிருந்தால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்க மாட்டார். எனினும், தற்போது ஆசிய கோப்பை அவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.