Asia Cup 2023: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

India Squad for Asia Cup 2023 Announced now; KL Rahul and Shreyas Iyer Return to team

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் விளையாட இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.

Jailer: ரஜினியின் தீவிர ரசிகர்; அயர்லாந்தில் ஜெயிலர் படம் பார்த்த சஞ்சு சாம்சன்!

ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியை இந்திய அணி நம்பியிருந்தது இருவரும் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி தங்களது உடல் தகுதியை நிரூபித்திருக்கின்றனர்.

50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்!

இந்த நிலையில், இன்று டெல்லியில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் மீட்டிங் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரிங்கு சிங் – திலக் வர்மா, யார் டி20 போட்டிகளில் சிறந்தவர்?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios