50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்!

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

Arshdeep Singh became the record holder of 50 wickets in t20 cricket

ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி வந்த அர்ஷ்தீப் சிங், இந்திய அணிக்கு சரியான தேர்வாக இருந்தார். யார்க்கர் வீசுவதிலும் வல்லமை மிக்கவராக திகழ்ந்தார். 140 கிமீ வேகத்தில் பந்து வீசி வந்தார். டெத் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசு வரும் நிலையில், அர்ஷ்தீ சிங்கை பவர் பிளே ஓவர்களில் இந்திய அணி பயன்படுத்தி வந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வருகிறார். முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால், அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து அதிரடி வீரர் பால்பர்னி விக்கெட்டை வீழ்த்தினார்.

ரிங்கு சிங் – திலக் வர்மா, யார் டி20 போட்டிகளில் சிறந்தவர்?

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் 2ஆம் பிடித்துள்ளார். இதுவரையில் 33 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக குல்தீப் யாதவ் 29 போட்டிகளிலும், யுஸ்வேந்திர சஹால் 34 போட்டிகளிலும், பும்ரா 41 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.

வானவேடிக்கை காட்டிய ரிங்கு சிங், ஷிவம் துபே – இந்தியா 185 ரன்கள் குவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios