U19 World Cup 2024 : வெளியான முழு அட்டவணை - முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக களமிறங்கும் இந்தியா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), இன்று வெள்ளிக்கிழமை, U19 உலகக் கோப்பை 2024ம் ஆண்டு போட்டிகளுக்கான முழு அட்டவணையையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல், பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

U 19 world cup 2024 icc released the full scheduled india faces bangladesh in first game ans

16 அணிகள் போட்டியிடும் இந்த போட்டியில், மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளது, இலங்கையின், கொழும்பில் அமைந்துள்ள ஐந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் இந்த போட்டிகள் நடக்கவுள்ளது. P. Sara Oval, Colombo Cricket Club, Nondescripts Cricket Club, Singhalese Sports Club மற்றும் R Premadasa International Cricket Stadium உள்ளிட்ட இடங்களில் ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் நடக்கும் அரையிறுதிப் போட்டிகளையும், பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியையும் நடத்துவதற்குத் தேர்வு செய்யப்பட்ட அரங்காகும்.

ஜனவரி 13 அன்று போட்டிகள் துவங்கும் நிலையில், தொடக்க நாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஆர் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்ரீலங்கா, ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் 2022 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து, கொழும்பு கிரிக்கெட் கிளப்பில், ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் நியூசிலாந்து, நேபாளத்தை, பி. சாரா ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

India vs Australia ODI Match: அடிச்ச காத்துக்கு கரண்டே இல்லாம போச்சு; இதுல மழை வேறு….போட்டி பாதிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளில் கடந்த 2022ம் ஆண்டின் பதிப்பில் வெற்றி பெற்ற இந்தியா, 2020ம் ஆண்டு வெற்றியாளர்களான பங்களாதேஷுக்கு எதிராக, போட்டிகள் துவங்கிய மறுநாள் ஜனவரி 14 ஆம் தேதி ஆர் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டியிடுகின்றனர். 

வரவிருக்கும் இந்த 2024ம் ஆண்டு போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தப்பட்ட வடிவத்தில், குழு நிலைகளில் இருந்து முன்னேறும் அணிகள் ஜனவரி 24 முதல் புதிய சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்குள் நுழையும், அங்கு ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் அரையிறுதி மற்றும் அடுத்தடுத்த இறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிக்க மோதும்.

குரூப் பட்டியல்களில், இந்தியாவுடன் வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குழு Aல் இணைந்துள்ளன. B பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளன. குரூப் Cயில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவும், D பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளன.

இந்த அட்டவணையின் அறிவிப்பைப் பற்றி ஐசிசி நிகழ்வுகளின் தலைவர் கிறிஸ் டெட்லி வெளியிட்டார், அப்போது பேசிய அவர் “ஐசிசி U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை, விளையாட்டின் எதிர்கால நட்சத்திரங்களுக்கு உலகளாவிய பார்வையாளர்களை அறிமுகப்படுத்தும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது.

"விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் இருந்து தான் உலக அரங்கில் நுழைந்தனர் என்றார் அவர். 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இலங்கைக்குத் திரும்பும் இந்த போட்டியைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பொழுதுபோக்கிற்குப் பஞ்சமில்லாத கிரிக்கெட் திருவிழாவாக இது இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

போட்டிப் பணிப்பாளர் சமந்தா தொடன்வெல பேசுகையில், “18 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு மீண்டும் வரும் இந்த கௌரவமான நிகழ்வை வரவேற்பதில் இலங்கை கிரிக்கெட் மகிழ்ச்சியடைகிறது என்றார். “இலங்கை அதன் ஆர்வமுள்ள, கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்களுக்குப் பெயர் பெற்றது, மேலும் இந்த 23 நாட்கள் நடைபெறும் போட்டியை உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களைக் காணும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க நாங்கள் ஆவலாக உள்ளோம் என்றும் கூறினார். 

"அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இந்த நிகழ்வை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்கள் பல ஆண்டுகளாக பல திறமையான கிரிக்கெட் வீரர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானங்கள் விளையாட்டின் எதிர்கால நட்சத்திரங்களை வழிநடத்துவதற்கு பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

IND vs AUS: பீல்டிங், கேட்ச், ரன் அவுட் எல்லாவற்றையும் கோட்டை விட்ட கேஎல் ராகுல் – ஆஸி, 276 ரன்கள் குவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios