IND vs AUS: பீல்டிங், கேட்ச், ரன் அவுட் எல்லாவற்றையும் கோட்டை விட்ட கேஎல் ராகுல் – ஆஸி, 276 ரன்கள் குவிப்பு!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் குவித்துள்ளது.

Australia Scored 276 Runs in 1st ODI Match Against India at Mohali rsk

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

India vs Australia ODI Match: அடிச்ச காத்துக்கு கரண்டே இல்லாம போச்சு; இதுல மழை வேறு….போட்டி பாதிப்பு!

அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. இதில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் முகமது ஷமி ஓவரில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 2ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்தது. வார்னர் 14 ரன்களாக இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட்டார்.

Pakistan ODI World Cup Squad: ஒருவழியாக அணியை அறிவித்த பாகிஸ்தான்: உசாமா மிர், ஹசன் அலிக்கு வாய்ப்பு!

இதன் காரணமாக வார்னர் ஒருநாள் போட்டியில் தனது 29ஆவது அரைசதத்தை அடித்தார். மேலும், இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 101 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மார்னஷ் லபுஷேன் களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் ஷமி பந்தில் கிளீன் போல்டார்.

அடுத்து லபுஷேனுடன், கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் லபுஷேன் 11 ரன்களாக இருந்த போது கொடுத்த ரன் அவுட் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் தவறவிட்டார். இதையடுத்து அவர் கூடுதலாக 28 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேமரூன் க்ரீன் 31 ரன்களில் ரன் அவுட்டானார்.

1st ODI:ருதுராஜ் கெய்க்வாட், அஸ்வினுக்கு வாய்ப்பு; 8ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்கும் கேஎல் ராகுல்!

அதன் பிறகு ஜோஸ் இங்கிலிஸ் களமிறங்கினார். இவர் வந்த வேகத்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசினார். இதே போன்று மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்தடுத்த பவுண்டரி அடித்த நிலையில், ஷமி பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து இங்கிலிஸ் 45 பந்துகளில் பும்ரா பந்தில் ஷ்ரேயாஸ் இயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மேத்யூ ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, சீன் அபாட் 2 ரன்களில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இறுதியாக பேட் கம்மின்ஸ் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் குவித்தது.

India vs Australia, 1st ODI: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒரு நாள் போட்டி எந்த சேனலில் ஒளிபரப்பாகிறது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios