Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics மகளிர் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் பி.வி.சிந்து.
 

tokyo olympics pv sindhu enters quarter final of badminton womens single
Author
Tokyo, First Published Jul 29, 2021, 7:22 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் மீராபாய் சானு வென்று கொடுத்த வெள்ளி பதக்கத்தை தவிர இதுவரை வேறு பதக்கமே கிடைக்கவில்லை. ஆனால், பாக்ஸிங்கில் மேரி கோம், லவ்லினா மற்றும் பேட்மிண்டனில் பி.வி.சிந்து ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நகர்ந்த இந்தியாவின் பி.வி.சிந்து, அடுத்த போட்டியில் ஹாங்காங்கின் சியூங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார்.

tokyo olympics pv sindhu enters quarter final of badminton womens single

இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் மியா ப்ளிட்ச்ஃபெல்ட்டை எதிர்கொண்டார் பி.வி.சிந்து. கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் ஆரம்பத்திலிருந்தே மியா மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய பி.வி.சிந்து, ஆட்டத்தின் எந்த சூழலிலும் அவரை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை.

மிகச்சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-15 மற்றும் 2வது செட்டை 21-13 என வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios