India At 2024 Summer Olympics: துப்பாக்கி, தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு அதிக பதக்கம் கிடைக்க வாய்ப்பு!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் துப்பாக்கி மற்றும் தடகளப் போட்டியில் மட்டும் கிட்டத்தட்ட 21 மற்றும் 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் கிட்டத்தட்ட 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியா சார்பில் மட்டும் 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இதில் அனைவரது பார்வையும் நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, மீராபாய் சானு, அனுஷ் அகர்வாலா, ரிதம் சங்வான், மனு பாகர், ரமீதா ஜிண்டால், இளவேனில் வளரிவன், அங்கிதா பகத், சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் உள்பட பலர் மீது விழுகிறது. இவர்கள் இந்திய நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கி மற்றும் தடகளம் விளையாட்டு போட்டிகளில் முறையே 21 மற்றும் 29 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 18 விளையாட்டுகளுக்கு 122 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், நீரஜ் சோப்ரா மட்டுமே ஈட்டி எறிதலில் இந்திய நாட்டிற்காக தங்கப் பதக்கம் கைப்பற்றி கொடுத்தார். இந்த தொடரில் இந்தியா 7 பதக்கங்களை மட்டுமே வென்றது. ஆனால், இந்த ஆண்டு அப்படி இருக்காது. அதைவிட அதிக பதக்கங்களை இந்தியா குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை பற்றி பார்க்கலாம் வாங்க…
பாகிஸ்தான் மகளிர் அணியை கதறவிட்ட ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா - இந்திய மகளிர் அணி எளிய வெற்றி!
இந்தியா விளையாடும் போட்டிகள்:
1. வில்வித்தை – ஜூலை 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையில் வில்வித்தை போட்டி நடைபெறுகிறது. இதில், 5 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டியில் 128 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் 3 வீரர், 3 வீராங்கனைகள் உள்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.
2. தடகளம் - ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், 48 நிகழ்வு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 1810 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தமாக 29 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். டிராக் மற்றும் ஃபீல்டு, ரேஸ்வாக் மற்றும் ரன்னிங் என்று மொத்தமாக 48 பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது.
பாண்டியாவின் 170 கோடி சொத்துக்களை எழுதி வாங்கிட்டு தான் நடாஷா சென்றாரா?
3. பேட்மிண்டன் – 5 நிகழ்வு – 49 நாடுகளைச் சேர்ந்த 173 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு. இந்தியா சார்பில் 7 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
4. குத்துச்சண்டை – இந்தியா சார்பில் 6 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 13 நிகழ்வு. இதில், 68 நாடுகளைச் சேர்ந்த 248 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகிறது.
5. குதிரையேற்றம் – இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார். 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில், 49 நாடுகளைச் சேர்ந்த 200 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
6. ஃபீல்டு ஹாக்கி – இந்த போட்டி 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 2 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
7. கோல்ஃப் – ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 2 நிகழ்வுகளுக்கான இந்தப் போட்டியில் மொத்தமாக 120 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் 2 வீரர், 2 வீராங்கனைகள் உள்பட 4 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
8. ஜூடோ – ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையில் ஜூடோ விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. 15 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் 186 வீரர், 186 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 372 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் ஒரே ஒரு பெண் வீராங்கனை இடம் பெற்று விளையாடுகிறார்.
9. ரோவிங் – ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையில் ரோவிங் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. 14 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் 502 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் ஒரே ஒரு வீரர் மட்டுமே இடம் பெற்று விளையாடுகிறார்.
10. படகு போட்டி - ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரையில் படகு விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. 10 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் 165 வீரர், 165 வீராங்கனைகள் உள்பட 330 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் ஒரு வீரர், ஒரு வீராங்கனை என்று 2 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
11. துப்பாகி சுடுதல் - ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. 15 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் 170 வீரர், 170 வீராங்கனைகள் உள்பட 340 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் ஒரு 10 வீரர்கள், 11 வீராங்கனைகள் என்று 21 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
12. நீச்சல் – ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையில் நீச்சல் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதே போன்று ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மராத்தான் போட்டி நடைபெறுகிறது. 37 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் நீச்சலில் ஒரு வீரர், ஒரு வீராங்கனை என்று 2 வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
13. டேபிள் டென்னிஸ் – 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் டேப்பிள் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. 5 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் 172 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் 3 வீரர்கள், 3 வீராங்கனைகள் உள்பட 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
14. டென்னிஸ் – ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையில் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. 5 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
15. பளுதூக்குதல் – ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் பளுதூக்குதல் போட்டி நடைபெறுகிறது. 10 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டியில் 122 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் மீராபாய் சானு இடம் பெற்று விளையாடுகிறார்.
16. மல்யுத்தம் – ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையில் 11 ஆம் தேதி வரையில் மல்யுத்தம் போட்டி நடைபெறுகிறது. இதில் 18 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டியில் 290 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் ஒரு வீரர், 5 வீராங்கனைகள் உள்பட 6 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
- 2024 Paris Games
- Break Dancing
- India at the 2024 Summer Olympics
- Indian weightlifter
- Mirabai Chanu
- Neeraj Chopra
- New Olympic Sports Breaking
- Olympic Schedule
- Olympics
- Olympics Sports
- PV Sindhu
- Paris 2024
- Paris 2024 Olympics
- Paris Olympic Venues
- Paris Olympics 2024
- Paris Olympics 2024 Closing Ceremony
- Paris Olympics 2024 Opening Ceremony
- Saikhom Mirabai Chanu
- Summer Olympics 2024
- Weightlifting