பாண்டியாவின் 170 கோடி சொத்துக்களை எழுதி வாங்கிட்டு தான் நடாஷா சென்றாரா?
ஹர்திக் பாண்டியாவின் ரூ.170 கோடி சொத்துக்களை நடாஷா எழுதி வாங்கிட்டு சென்றதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அதில் உண்மையில். காரணம், பாண்டியாவின் சொத்து மதிப்பு ரூ.91 கோடி தான்.

Hardik Pandya and Natasa Stankovic Separated
ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியா நாட்டு நடிகை நடாஷா ஸ்டான்கோவிட் இருவரும் 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு தனித்தன்யாக பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.
Natasa Stankovic Separated
தமிழில் வெளியான அரிமா நம்பி படத்தில் வரும் நானும் உன்னில் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். மாடல் மற்றும் நடிகையான நடாஷா கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டியாவை சந்தித்து இருவரும் நட்பாக பேசி பழகி அதன் பிறகு காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இருவரும் லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
Hardik Pandya Separated
இதனால், நடாஷா கர்ப்பமான நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜூலையில் அகஸ்தியா பிறந்தான். திருமணத்திற்கு பிறகு நடாஷா நடிப்பை தொடரவில்லை. மேலும், இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
Hardik Pandya and Natasa Stankovic Separated
இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் மீண்டும் திருமணம் செய்து கொண்டர். இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை நீக்கினர்.
Hardik Pandya, Natasa Stankovic
இந்த நிலையில் தான் நடாஷா ஸ்டான்கோவிச் தனது மகன் அகஸ்தியா உடன் செர்பியாவிற்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், செர்பியா சென்ற நடாஷா பாண்டியாவிடமிருந்து ரூ.170 கோடி சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு சென்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வந்த வணணம் இருந்தது.
Natasa Stankovic Separated
உண்மையில், ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு ரூ.91 கோடி மட்டுமே. மேலும், வருமானம் ரூ.1.2 கோடி. அப்படியிருக்கும் இருக்கும் எப்படி ரூ.170 கோடி சொத்துக்களை எழுதி கொடுத்திருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியா வெளியிட்ட வீடியோவில் தனது வீடு, கார், பங்களா, பேங்க் அக்கவுண்ட்ஸ் என்று எல்லாவற்றிலும் பாதி பங்குகள் தனது அம்மாவின் பெயரில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
Hardik Pandya Divorce
ஆதலால் நடாஷாவிற்கு பாண்டியா எதுவும் கொடுக்கவில்லை. அவருக்கு ரூ.170 கோடி சொத்தும் இல்லை. 70 சதவிகித பங்குகளை எழுதியும் கொடுக்கவில்லை. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து சென்றுள்ளனர். ஆனால், அவரது மகன் அகஸ்தியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்வேன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.