மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் இந்திய மகளிர் அணியானது, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடரின் 9ஆவது சீசன் தற்போது தம்புல்லாவில் தொடங்கியுள்ளது. இதில் இன்று நடந்த முதல் போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடந்த 2ஆவது போட்டியில் இந்திய மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் நிடா தர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 108 ரன்னுக்கு சரண்டரான பாகிஸ்தான் மகளிர் அணி!

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரேகர், ரேணுகா தாகூர் சிங் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 85 ரன்கள் குவித்தது. இதில், ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இவரைத் தொடர்ந்து ஷஃபாலி வர்மா 40 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பளுதூக்குதலில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுக்க காத்திருக்கும் வீராங்கனை மீராபாய் சானு!

இறுதியாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமீமா ரோட்ரிக்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இந்திய மகளிர் அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தம்புல்லாவில் நடைபெற்ற மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணியானது 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Olympics 2024: பாரீஸ் 2024 ஒலிம்பிக் மொத்த விளையாட்டு 32, இந்தியா விளையாடும் போட்டிகளின் பட்டியல்!