Olympics 2024: பாரீஸ் 2024 ஒலிம்பிக் மொத்த விளையாட்டு 32, இந்தியா விளையாடும் போட்டிகளின் பட்டியல்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்ற 32 விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஹாக்கி, பேட்மிண்டன், ஈட்டி எறிதல், தடகளம், குத்துச்சண்டை என்று மொத்தமாக 16 விளையாட்டு போட்டிகளில் விளையாடுகிறது.

Including Badminton, Archery, Boxing, Field Hockey, Athletics, judo, Wrestling there are 16 Games India Playing in Paris 2024 Olympics rsk

பாரீஸில் 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக ஒலிம்பிக் தொடர் நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, சுமித் நாகல், ரோகன் போபண்ணா, துலிகா மான், விஷ்ணு சரவணன், பால்ராஜ் போவிங், மானவ் தக்கர், அனுஷ் அகர்வாலா, நிஷாந்த் தேவ் ஆகியோர் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்ற 32 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 206 நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகிறார்கள். இந்த தொடரில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் மட்டுமே விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.

இந்தியா விளையாடும் போட்டிகளின் பட்டியல்:

1. வில்வித்தை

2. தடகளம் - ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், 48 நிகழ்வு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 1810 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தமாக 29 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். டிராக் மற்றும் ஃபீல்டு, ரேஸ்வாக் மற்றும் ரன்னிங் என்று மொத்தமாக 48 பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது.

3. பேட்மிண்டன் – 5 நிகழ்வு – 49 நாடுகளைச் சேர்ந்த 173 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு. இந்தியா சார்பில் 7 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

4. குத்துச்சண்டை – இந்தியா சார்பில் 6 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 13 நிகழ்வு. இதில், 68 நாடுகளைச் சேர்ந்த 248 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகிறது.

5. குதிரையேற்றம் – இந்தியா சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கிறார். 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில், 49 நாடுகளைச் சேர்ந்த 200 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

6. ஃபீல்டு ஹாக்கி

7. கோல்ஃப்

8. ஜூடோ

9. ரோவிங்

10. படகு போட்டி

11. துப்பாகி சுடுதல்

12. நீச்சல்

13. டேபிள் டென்னிஸ்

14. டென்னிஸ்

15. பளுதூக்குதல்

16. மல்யுத்தம்

  • என்று மொத்தமாக 16 விளையாட்டு போட்டிகளில் விளையாடுகிறது.

பாரீஸிற்கு வெளியில் கிட்டத்தட்ட 15,000 கிமீ தொலைவிற்கு வெளியில் நடக்கும் போட்டி என்றால் அது சர்ஃபிங் தான். இந்தப் போட்டியானது ஜூலை 27 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 2 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டிக்கு 21 நாடுகளிலிருந்து 48 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரேக்கிங்:

பாரீஸ் ஒலிம்பிக்கில் புதிதாக் பிரேக்கிங் (பிரேக் டான்ஸ்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி போடுவார்கள். அதாவது, பாரிஸ் விளையாட்டு போட்டிகளில் ஒரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்களுக்கான போட்டிகள் இடம் பெறும். 16 பி பாய்ஸ் மற்றும் 16 பி கேர்ல்ஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதுவார்கள். ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. 2 நிகழ்வுகள் கொண்ட இந்தப் போட்டிக்காக 32 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஈபிள் டவர்:

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஈபிள் டவர் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி என்றால் பீச் வாலிபால் போட்டியானது ஈபிள் டவர் அருகில் தற்காலிகமாக ஸ்டேடியம் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. வரும் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 24 வாலிபால் அணிகள் மற்றும் 48 பீச் வாலிபால் அணிகள் போட்டி போடுகின்றன. 4 நிகழ்வுகள் கொண்ட இந்த போட்டிக்கு 31 நாடுகளிலிருந்து 384 விளையாட்டு வீரர்கள் போட்டி போடுகின்றனர். ஒலிம்பிக் பதக்கங்கள் அனைத்தும் ஈபிள் டவரிலிருந்து எடுக்கப்பட்ட அசல் இரும்பு உலோகத்தால் உருவக்கப்பட்டது.

மராத்தான்:

வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் மராத்தானில் இடம் பெற்று விளையாடும் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பொதுமக்களும் மராத்தானில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தடகளம் மற்றும் நீச்சல் என்று 2 வகைகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நீச்சல் மராத்தான் போட்டியும், ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மராத்தான் போட்டியும் நடத்தப்படுகிறது. மொத்தமாக 37 நிகழ்வுகளை கொண்டுள்ளது.

Freestyle: – 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ மற்றும் 1500 மீ

Backstroke: 100 மீ மற்றும் 200 மீ

Breaststroke: 100 மீ மற்றும் 200 மீ;

Butterfly: 100 மீ மற்றும் 200 மீ;

Individual medley: 200 மீ மற்றும் 400 மீ

Relays: 4 × 100 ஃபரீ, 4 × 200 ஃபரீ; 4 × 100 (ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு)

Marathon: 10 கிமீ தூரம்

இதில் கிட்டத்தட்ட 35,000 மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசி கிடையாது:

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இடம் பெற்ற விளையாட்டு வீரர்களின் அறைகளில் ஏசி கிடையாதாம். இது எப்போதும் போன்று பசுமையான விளையாட்டுகளை நடத்துவதை உறுதி செய்கிறது. பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் சம எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வரலாற்றில் முதல் முறையாக 10714 விளையாட்டு வீரர்களில் 5,357 ஆண்கள் மற்றும் 5,357 பெண்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

100 ஆவது ஆண்டு விழா:

2024 பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸூக்கு திரும்புவதை இந்த 2024 கோடைகால ஒலிம்பிக் தொடர் குறிக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 1900 மற்று 1924 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் பாரீஸீல் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதையடுத்து 100 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக பாரீஸ் ஒலிம்பிக் தொடர் நடடத்தப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios