இந்திய அணியின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 108 ரன்னுக்கு சரண்டரான பாகிஸ்தான் மகளிர் அணி!
தம்புல்லாவில் தொடங்கிய மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 தொடரின் 9ஆவது சீசனில் 2ஆவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், முதல் போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலாக நடைபெற்ற போட்டியில் நேபாள் மகளிர் அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி தற்போது தம்புல்லாவி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் நிடா தர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ரன்கள் எடுத்தார். முதல் 4 ஓவர்களேயே பாகிஸ்தான் மகளிர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது தான் சித்ரா அமீர் களமிறங்கி நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த அலியா ரியாஸ் மற்றும் கேப்டன் நிடா தர் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த துபா ஹாசன் மற்றும் ஃபாத்திமா சென் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். துபா ஹாசன் 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபாத்திமா சென் 22 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Olympics 2024: பாரீஸ் 2024 ஒலிம்பிக் மொத்த விளையாட்டு 32, இந்தியா விளையாடும் போட்டிகளின் பட்டியல்!
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரேகர், ரேணுகா தாகூர் சிங் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 7 முறை டிராபியை வென்றுள்ளது. ஒரு முறை வங்கதேச மகளிர் அணி டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
தற்போது 9ஆவது சீசனில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், நேபாள், மலேசியா, இலங்கை என்று 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்த தொடர் இலங்கையில் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Paris 2024: 100 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்தும் பாரீஸ்!