இந்தியாவின் 80 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 29 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். செஸ் விளையாட்டில் மற்ற மாநிலங்களில் பக்கத்தில் கூட வர முடியாத உயரத்தில் இருக்கும் தமிழ்நாடு, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

ஜெர்மனியில் நடந்த 24வது நார்ட்வெஸ்ட் கோப்பை செஸ் தொடரில் விக்னேஷ் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கிராண்ட்மாஸ்டர் ஆனார். இவர் இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர். தமிழ்நாட்டின் 29வது கிராண்ட்மாஸ்டர். இந்தியாவின் 80 கிராண்ட்மாஸ்டர்களில் 29 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற பெருமையுடன் இந்த பட்டியலில் தமிழ்நாடு மற்ற மாநிலங்கள் நெருங்கக்கூட முடியாத உயரத்தில் முதலிடத்தில் உள்ளது.

விக்னேஷின் சகோதரர் விசாக் என்பவரும் செஸ் பிளேயர் தான். அவர் 2019ல் கிராண்ட்மாஸ்டர் ஆனார். இதன்மூலம் செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் ஆன முதல் இந்திய சகோதரர்கள் என்ற சாதனையையும் விசாக் - விக்னேஷ் சகோதரர்கள் படைத்துள்ளனர். 

80ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி தமிழக வீரர் சாதனை!

79வது கிராண்ட்மாஸ்டரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். 16 வயதான பிரனேஷ், கடந்த மாதம் தான் இந்தியாவின் 79வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். ஒரே மாதத்தில் 80வது கிராண்ட்மாஸ்டரும் தமிழ்நாட்டிலிருந்தே வந்துள்ளார்.

எட்டு * எட்டு கட்ட செஸ் ஆட்டத்தில் தமிழர்களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்பதை தொடர்ச்சியாக கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கி கொடுத்து, செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது தமிழ்நாடு. இந்தியாவின் 80 கிராண்ட்மாஸ்டர்களில் 29 பேரை கொடுத்து மற்ற மாநிலங்கள் பக்கத்தில் கூட வரமுடியாத அளவிற்கு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது தமிழ்நாடு. 

1988ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த். அவர் தொடங்கி வைத்த இந்த சாதனைப்பயணத்தில் இன்றளவும் தமிழ்நாடு வீரர்கள் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்து நம்பர் 1 இடத்தை பிடித்த ஹர்மன்ப்ரீத் கௌர்

இந்தியாவிற்கு மாநிலங்கள் வழங்கிய செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்:

1. தமிழ்நாடு - 29
2. மகாராஷ்டிரா - 11
3. மேற்கு வங்கம் - 10
4. டெல்லி - 6
5. தெலுங்கானா - 5
6. ஆந்திரா, கர்நாடகா - 4
7. கேரளா - 3
8. ஒடிசா, குஜராத், கோவா - 2
9. ராஜஸ்தான், ஹரியானா -1