ஜெர்மனியில் நடந்த செஸ் போட்டியில் தமிழக வீரர் விக்னேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியில் 24ஆவது நார்ட் வெஸ்ட் 2023 செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ், ஜெர்மனியின் லிஜா ஸ்னெடைருடன் மோதினர். இந்தப் போட்டி தொடங்கியது முதல் விக்னேஷ் சிவன் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதையடுத்து, அவர் லிஜா ஸ்னெடைரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த சூர்யகுமார் யாதவ்!
இந்த வெற்றியின் மூலமாக விக்னேஷ் 2500 புள்ளிகளை கடந்தார். இதன் மூலம் அவர் 80ஆவது இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். தேசிய அளவில் ரயில்வே துறை சார்பில் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக விக்னேஷின் சகோதரர் வைசாக் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய 59ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய சகோதரர்கள் விசாக் மற்றும் விக்னேஷ் இருவரும் மட்டுமே ஆகும்.
தோனி முதல் பாண்டியா வரை எல்லா கேப்டனாலும் ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்சன்!
சகோதரரின் வெற்றி குறித்து விசாக் கூறியிருப்பதாவது: சகோதரர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியது மிகவும் அருமையானது. எங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துவோம். சகோதரர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியவர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்த்தவர்கள்.
