Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்து நம்பர் 1 இடத்தை பிடித்த ஹர்மன்ப்ரீத் கௌர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் ஆடிய முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார்.
 

harmanpreet kaur historic record in t20 cricket
Author
First Published Feb 21, 2023, 5:51 PM IST

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 5 அணிகள் க்ரூப் ஏ-விலும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 5 அணிகள் க்ரூப் பி-யிலும் இடம்பெற்று லீக் சுற்றில் ஆடின.

இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. க்ரூப் பி-யிலிருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. க்ரூப் ஏ-விலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினால் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா தோற்றால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருந்தால் பெரிய பிரச்னை..! பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விளாசிய ஆலன் பார்டர்

க்ரூப் பி-யில் இடம்பெற்ற இந்திய அணி, முதல் 3 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்திடம் மட்டும் தோற்றிருந்தது. கடைசி லீக் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

அயர்லாந்துக்கு எதிரான அந்த போட்டி இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு 150வது டி20 போட்டி. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் ஆடிய முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்தார். ஆடவர் கிரிக்கெட்டில் கூட எந்த வீரரும் 150 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியதில்லை. எனவே ஹர்மன்ப்ரீத் கௌர் முதல் முறையாக 150 டி20 போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

மேலும், அயர்லாந்துக்கு எதிராக அடித்த 13 ரன்களுடன் சேர்த்து 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கௌர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4வது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

இதற்கு முன்பாக நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ்(3820), ஆஸி., வீராங்கனை மெக் லானிங் (3346), வெஸ்ட் இண்டீஸின் ஸ்டெஃபானி டெய்லர் (3166) ஆகியோர் வரிசையில் 4ம் இடத்தை பிடித்தார் ஹர்மன்ப்ரீத் கௌர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios