2017ம் ஆண்டின் முதல் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மாட்டக் சான்ட்ஸ் ஜோடி கைப்பற்றியது.மகளிர் இரட்டையர் பிரிவில் மகுடத்தை வென்றது சானியா, மாட்டக் சான்ட்ஸ் ஜோடி.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த  பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில்மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் 2-ம் இடத்தில் உள்ள கேத்தரீனா மகரோவா, எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது சானியா மிர்சா, மாட்டக் சான்ட்ஸ் ஜோடி.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மகரோவா, வெஸ்னினா ஜோடியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சானியா, மாட்டக் எளிதாகத் தோற்கடித்தனர்.

சர்வதேச டென்னிஸ் வரிசையில் கடந்த ஆண்டு தொடர்ந்து 91 வாரங்கள் முதலிடத்தில் சானியா, ஹிங்கிஸ்இருந்துவந்தனர். ஆனால், தரவரிசையில் முதலிடத்தை இழந்தபின், அமெரிக்காவின் மாட்டக் சான்ட்ஸுடன்இணைசேர்ந்தார் சானியா.