கையில் வாழைப்பழத்துடன் செஸ் போட்டிக்கு வரும் பிரக்ஞானந்தா.. என்ன காரணம் தெரியுமா? ரகசியத்தை கூறும் பெற்றோர்.!
இந்திய செஸ் பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஒவ்வொரு செஸ் போட்டிக்கும் கையில் வாழைப்பழத்தோடு வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
இந்திய செஸ் பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஒவ்வொரு செஸ் போட்டிக்கும் கையில் வாழைப்பழத்தோடு வருவது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் சென்னையில் கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த 6 அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றன.
இதையும் படிங்க;- செஸ் ஓலிம்பியாட்: தொடர் வெற்றிகள்.. சர்வதேச வீரர்களை தெறிக்கவிடும் திறமை..! யார் இந்த குகேஷ்..?
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய ஆடவர் பி அணிதான் டாப்பில் இருக்கிறது. மகளிர் பி அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. ஆனால் மகளிர் சி அணி ஒரு தோல்வியுடன் திணறி வருகிறது. இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மிக முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுகிறார். இந்திய பி அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்றும் பிரக்ஞானந்தா அணியை பார்த்து நார்வே ஜாம்பவான் மேக்னஸ் கார்ல்சனே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு இடையே இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா ஒரு பெரிய வாழைப்பழத்துடன் கலந்து கொள்ளும் காட்சிகள் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில்;- பிரக்ஞானந்தா ஒரு பொருளை இருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிட சற்று கூச்சப்படுவார். ஆகையால், அவனுக்கு தினமும் கடைக்கு சென்று இருப்பதிலேயே பெரிய வாழைப்பழம் வாங்கி கொடுத்து அனுப்பி விடுவேன். அவன் பசித்தால் மட்டும் அதனை எடுத்து சாப்பிடுவான்.
இதையும் படிங்க;- செஸ் ஒலிம்பியாட்: இன்று(ஆகஸ்ட் 2) நடக்கும் 5வது சுற்றில் இந்திய அணிகளின் போட்டி அட்டவணை
மேலும் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்கில் போட்டியாளர்கள் உட்கொள்ள வித விதமான உணவு பொருட்கள், அவர்களுக்காகவே தனியாக ஒரு அறையில் வைத்திருந்தாலும், அதனை உட்கொள்ள பிரக்ஞானந்தா விரும்பமாட்டார். அதற்காக தான் ஒரு டைரி மில்க் மற்றும் வாழைப்பழத்தை அவரது கையில் கொடுத்து அனுப்புவதாக அவரது தாய் மற்றும் தந்தை தெரிவித்தனர். மற்றபடி அவரது போட்டிக்கும், வாழைப்பழத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்தனர்.