செஸ் ஒலிம்பியாட்: இன்று(ஆகஸ்ட் 2) நடக்கும் 5வது சுற்றில் இந்திய அணிகளின் போட்டி அட்டவணை
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் இன்று நடக்கும் 5வது சுற்றில் இந்திய அணிகளின் போட்டி அட்டவணையை பார்ப்போம்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக ஆடிவருகின்றனர்.
நேற்று நடந்த 4வது சுற்றில் ஓபன் பிரிவில், ஃப்ரான்ஸை எதிர்கொண்ட இந்தியா ஏ அணி டிரா செய்தது. இத்தாலியை வீழ்த்தி இந்தியா பி அணி வெற்றி பெற்றது. இந்தியா சி அணி ஸ்பெய்னிடம் தோற்றது.
இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: 5ம் நாளான இன்று(ஆகஸ்ட் 2) இந்தியாவின் போட்டி அட்டவணை
மகளிர் பிரிவில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் முறையே ஹங்கேரி மற்றும் எஸ்டானியா அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜார்ஜியாவிடம் இந்தியா சி அணி தோல்வியை தழுவியது.
இன்று (ஆகஸ்ட் 2) நடக்கும் 5வது சுற்றில் இந்திய அணிகளின் போட்டி அட்டவணையை பார்ப்போம்.
ஓபன் பிரிவில் இந்தியா ஏ அணி ரோமானியாவை எதிர்கொள்கிறது. இந்தியா ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பெண்டாலா, விதித் சந்தோஷ் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி மற்றும் நாராயணன் ஆகிய நால்வரும் ஆடுகின்றனர்.
இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்
இந்தியா ஏ மகளிர் அணி ஃபிரான்ஸை எதிர்கொள்கிறது. மகளிர் ஏ பிரிவில் கெனெரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, வைஷாலி ரமேஷ்பாபு, தானியா சச்தேவ் ஆகிய வீராங்கனைகள் ஆடுகின்றனர்.
ஓபன் பிரிவில் இந்தியா பி அணி ஸ்பெய்னை எதிர்கொள்கிறது. பி அணியில் குகேஷ், நிஹால் சரின், பிரக்ஞானந்தா மற்றும் அதிபன் ஆகிய வீரர்கள் ஆடுகின்றனர்.
இந்தியா மகளிர் பி அணி ஜார்ஜியா அணியை எதிர்கொள்கிறது. மகளிர் பி அணியில் வந்திகா அகர்வால், பத்மினி ரூட், சௌமியா சுவாமிநாதன், திவ்யா தேஷ்முக் ஆகிய 4 வீராங்கனைகளும் ஆடுகின்றனர்.