காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 5ம் நாளான இன்றைய தினம் (ஆகஸ்ட் 2) இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டிகளை பார்ப்போம். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பர்மிங்காமில் நடந்துவருகின்றன. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். பளுதூக்குதலில் மட்டுமே 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

காமன்வெல்த் போட்டிகளின் 5ம் நாளான இன்றும், இந்தியாவிற்கு பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புள்ள போட்டிகள் நிறைய இருக்கின்றன. 5ம் நாளான இன்றைய தினம் (ஆகஸ்ட் 2) இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டிகளை பார்ப்போம்.

பளுதூக்குதல்:

மகளிர் 76 கிலோ - பூனம் யாதவ் (2:00 PM)
ஆடவர் 96 கிலோ - விகாஸ் தாகூர் (6:30 PM)
மகளிர் 87கிலோ - உஷா பன்னூர் (11:00 PM)

நீச்சல்:

ஆடவர் 200மீ பேக்-ஸ்ட்ரோக் ஹீட் 2 - ஸ்ரீஹரி நடராஜ் (3:04 PM)
ஆடவர் 1500மீ ஃப்ரீஸ்டைல் ஹீட் - அத்வைத் பேஜ், குஷக்ரா ராவத் (4:10 PM)

இதையும் படிங்க - காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 7வது பதக்கம்..! ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலம் வென்று அசத்தல்

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:

ஆடவர் வால்ட் ஃபைனல் - சத்யஜித் மொண்டால் (5:30 PM)
ஆடவர் Parallel Bars Final - சைஃப் சாதிக் டம்போலி (6:35 PM)

தடகளம்:

ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்று - ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் யாஹியா (2:30 PM)
ஆடவர் உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்று - தேஜஸ்வின் ஷங்கர் (12.03 AM)
மகளிர் வட்டு எறிதல் ஃபைனல் - சீமா புனியா, நவ்ஜீத் கௌர் தில்லான் (12.52 AM)

பேட்மிண்டன்:

கலப்பு இரட்டையர் ஃபைனல் - இந்தியா vs மலேசியா (10.00 PM)

பாக்ஸிங்:

ஆடவர் 67 கிலோ - காலிறுதிக்கு முந்தைய சுற்று - ரோஹித் டோகாஸ் (11.45 PM)

ஹாக்கி:

மகளிர் Pool A - இந்தியா vs இங்கிலாந்து (6.30 PM)

லான் பௌல்ஸ்:

மகளிர் இரட்டையர் முதல் சுற்று - இந்தியா vs நியூசிலாந்து
மகளிர் டிரிபிள்ஸ் முதல் சுற்று - இந்தியா vs நியூசிலாந்து
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று - மிரிதுல் பார்கொஹைன்
மகளிர் நால்வர் அணி தங்க பதக்கத்திற்கான போட்டி - இந்தியா vs தென்னாப்பிரிக்கா (4:15 PM)
ஆடவர் நால்வர் அணி முதல் சுற்று - இந்தியா vs ஃபிஜி
மகளிர் டிரிபிள்ஸ் 2வது சுற்று - இந்தியா vs இங்கிலாந்து

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

ஸ்குவாஷ்:

மகளிர் ஒற்றையர் பிளேட் அரையிறுதி - சுனைனா சாரா குருவில்லா (8:30 PM)
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி - சௌரவ் கோஷல் (9:15 PM)

டேபிள் டென்னிஸ்:

ஆடவர் அணி - தங்க பதக்கத்திற்கான போட்டி (6.00 PM)