அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடந்த தடகளப் போட்டியில் அவினாஷ் சபில் மற்றும் பருல் சவுத்ரி ஆகியோர் புதிய சாதனை படைத்துள்ளனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் டிராக் விழா எனப்படும் (Track Fest) தடகளப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் 5000 மீட்டர் தடகளப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அவினாஷ் சபில் மற்றும் பெண்கள் பிரிவில் பருல் சவுதி ஆகியோர் புதிய சாதனை படைத்துள்ளனர் என்று இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

எந்தெந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கு? டெல்லிக்கு கூட வாய்ப்பு இருக்கா?

Scroll to load tweet…

ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 13:19.30 வினாடிகளில் கடந்து தனது முந்தைய 13:25.65 வினாடி சாதனையை முறியடித்துள்ளார். எனினும், அவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 15:15.89 வினாடிகளில் கடந்த பிரீஜா ஸ்ரீதரணின் சாதனையை பருல் சவுத்ரி முறியடித்துள்ளார். அவர் 5000 மீட்டர் தூரத்தை 15:10.35 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதே போன்று மூன்று முறை தாண்டுதல் (Triple jump) பிரிவில் இந்தியாவின் பிரவீன் சித்ராவேல் புதிய சாதனையை இன்றூ நிகழ்த்தியுள்ளார்.

அண்ணனா? தம்பியா? விட்டுக் கொடுக்கப்போவது யார்? லக்னோ - குஜராத் பலப்பரீட்சை!

Scroll to load tweet…

Scroll to load tweet…

கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி - கங்குலி!