எந்தெந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கு? டெல்லிக்கு கூட வாய்ப்பு இருக்கா?
இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கூட பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒரு வழியாக இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தங்களது அணியும் இடம் பெற வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றன. ஐபிஎல் தொடரில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு சாட்சியாக நேற்று டெல்லி போட்டி அமைந்தது. நேற்று இரவு டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
அண்ணனா? தம்பியா? விட்டுக் கொடுக்கப்போவது யார்? லக்னோ - குஜராத் பலப்பரீட்சை!
இதில் முதலில் டாஸ் வென்று ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் டேவிட் வார்னர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். கடைசி வரை வானவேடிக்கை காட்டிய பிலிப் சால்ட் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 பந்துகள் எஞ்சிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி - கங்குலி!
இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் தற்போது 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமா, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு 11 சதவிகிதமாக உள்ளது. இனிவரும் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் ஐபிஎல் பிளே ஆஃப் கனவு நினைவாக வாய்ப்பிருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு 51 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக குறைந்துள்ளது.
போட்டினா சண்டை; அப்புறம் சமாதானம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் - சால்ட்; நல்ல வேல ஃபைன் இல்ல!
இதே போன்று மற்ற அணிகளுக்கும் எப்படி இருக்கிறது என்றால், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு தான் பிரகாசமாக தெரிகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 91 சதவிகிதமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 78 சதவிகிதமும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு 58 சதவிகிதமும் உள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 42 சதவிகிதமும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 36 சதவிகிதமும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 31 சதவிகிதமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12 சதவிகிதமும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 4 சதவிகிதமும் தான் பிளே ஆஃப் வாய்ப்புகள் உள்ளன.
தோனிக்காகவே பிஸியான ஷெடியூலிலும் சென்னை போட்டியை பார்க்க வந்த நயன்தாரா!
இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும். 2ஆவது சென்னை, 3ஆவது மும்பை இந்தியன்ஸ் வரலாம். 4ஆவது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடைசி நேரத்தில் எந்த அணியாவது பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.