Paris 2024 Olympics: பாரிஸில் கடும் புயல் எச்சரிக்கை – ஒலிம்பிக் போட்டி ரத்து? போட்டி அட்டவணை மாற்றமா?
கடந்த 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடக்க விழா உடன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். வில்வித்தை, ரோவிங், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ரோவிங், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜூடோ, கோஃல்ப் என்று 16 விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றன.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 4ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மகளிர் ஒற்றையர் 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது. ஹரியானாவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்தார். இந்த நிலையில் தான் பாரிஸில் கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் கனமழை பெய்யும் என்றும், பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: பாரிஸ் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புயல் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, 20 முதல் 40 மில்லி மீட்டர் வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மழை பெய்தால் போட்டி அட்டவணை மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!
மழையின் காரணமாக போட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவின் போது மழை பெய்தது. அப்போது அணிவகுப்பில் கலந்து கொண்ட வீரர்கள் மழையின் நனைந்தபடி படகுகளில் ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடரில் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் பிரதமர் மோடி சரப்ஜோத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.#Paris2024Olympic… pic.twitter.com/ZTb3DJXQ07
— Asianetnews Tamil (@AsianetNewsTM) July 30, 2024
- 10m Air Pistol Final
- 2024 Summer Olympic Games
- Badminton
- Hockey
- India 2nd Bronze Medal
- India at 2024 Summer Olympics
- Manu Bhaker
- Olympic Games
- Olympics 2024
- Olympics Date and Time
- Olympics Schedule 2024
- Paris 2024
- Paris Olympics 2024
- Paris Olympics 2024 India Schedule
- Paris Olympics 2024 India Schedule 4th Day July 30
- Paris Storm Alert
- Paris Storm Alert on Day 4
- Sarabjot Singh
- Shooting
- Storm Alert for Day 4