Jiya Rai: 16 வயதில் ஆங்கில கால்வாயை கடந்து இந்திய கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகள் ஜியா ராய் உலக சாதனை!
இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்திச் சென்று கடந்து இந்தியா கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகளான ஜியா ராய் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் அப்போட்ஸ் கிளிஃப் பகுதியிலிருந்து பிரான்சின் பாய்ண்ட் டே லா கோர் டியூன் பகுதி வரை பாய்ந்து செல்லும் ஆங்கில கால்வாயின் 34 கிமீ தூரத்தை 16 வயதான இந்திய மாற்றுத் திறனாளியான ஜியா ராய் 17 மணி நேரம் 25 நிமிடங்களில் நீந்திச் சென்று கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அதோடு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்த உலகின் இளம் வயது பாரா நீச்சல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அதோடு, இளம் வயதில் குறைவான நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை நீந்திச் சென்று ஒரு மாற்றுத்திறனாளி வீராங்கனையாக சரித்திரம் படைத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!
ஆங்கிலக் கால்வாயை கடப்பதற்கு முன்னதாக பாக் வளைகுடாவை நீந்தி சென்று கடந்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இந்திய கடற்படை வீரரின் மகள். ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மிக உயரிய விருதான பிரதமர் ராஷ்திரிய பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் தற்போது 17 மணி நேரம் 25 நிமிடங்களில் ஆங்கில கால்வாயை கடந்து புதிய உலக சாதனை படைத்த ஜியா ராயிற்கு கடற்படை சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவித்து வருகிறது. ஏசியாநெடி நியூஸ் தமிழ் சார்பாக நாமும் ஒரு வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். வாழ்த்துக்கள் சகோதரி….
இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் – வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி!