ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹரியானா வீராங்கனை மனு பாக்கர் படைத்துள்ளார்

Indian Shooter Manu Bhaker Becomes The first Indian woman to win 2 medals Bronze at Paris Olympics 2024 rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33ஆவது ஒலிம்பிக் தொடரில் இந்தியா துப்பாக்கி சுடுதல், பேமிண்டன், ஹாக்கி, ஜூடோ, தடகளம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, பளுதூக்குதல், மல்யுத்தம், வில்வித்தை என்று 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. இதில், இந்திய சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். முதல் நாளில் இந்தியா பதக்கம் வெல்லவில்லை.

இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் – வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி!

2ஆவது நாளில் இந்திய வீராங்கனை மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த மனு பாக்கரை தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ஏசியாநெட் நியூஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார். அதில், இந்தியா இன்னும் பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தார்.

குற்றத்தில் என்னுடைய பார்ட்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து – அன்பு மகனுக்கு ஹர்திக் பாண்டியாவின் ஸ்பெஷல் வாழ்த்து!

இந்த நிலையில் தான் இன்று 4ஆவது நாளில் நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தென் கொரியா ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய மனு பாக்கர் இந்தியாவிற்கு 2ஆவது முறையாக பதக்கம் வென்று கொடுத்துள்ளார். ஆம், தென் கொரியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Olympics 2024:இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 4: இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் வென்று கொடுப்பாரா மனு பாக்கர்?

இதன் மூலமாக பார்ஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மகளிருக்கான தனிநபர் 25மீ பிஸ்டல் பிரிவில் விளையாடுகிறார். அவருடன் மற்றொரு வீராங்கனையான ஈஷா சிங்கும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Paris Olympics 2024: இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வோம்: வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் நம்பிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios