Asianet News TamilAsianet News Tamil

ரோவிங்கில் காலிறுதிப் போட்டியில் 5ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீரர் பால்ராஜ் பன்வார்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 4ஆவது நாளான இன்று நடைபெற்ற ரோவிங் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 5ஆவது இடம் பிடித்து பதக்கத்திற்கான வாய்ப்பை நழுவவிட்டுள்ளார்.

Indian Rower Balraj Panwar Finished 5th Place with A timing of 7:05.10 and misses out the medals round at the Paris Olympics 2024 rsk
Author
First Published Jul 30, 2024, 5:16 PM IST | Last Updated Jul 30, 2024, 5:16 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா 16 விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரையில் இந்தியா 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Jiya Rai: 16 வயதில் ஆங்கில கால்வாயை கடந்து இந்திய கடற்படை வீரரின் மாற்றுத்திறனாளி மகள் ஜியா ராய் உலக சாதனை!

இதன் மூலமாக ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். மேலும் நீச்சல் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா பதக்கம் இல்லாமல் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் ரோவிங் போட்டியில் இந்தியா சார்பில் ஒரேயொரு வீரர் மட்டுமே பங்கேற்று இருந்தார்.

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்!

முதல் நாள் நடைபெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் 7 நிமிடம் 5.10 வினாடிகளில் இலக்கை கடந்து 5ஆவது இடம் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், பதக்கத்திற்கான வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும், தற்போது 13 முதல் 24 இடங்களுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டி நாளை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் – வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios