பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய 17 வயது வீராங்கனை நேஹா தாக்கூர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023யில் இன்று நடந்த பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த நேஹா தாக்கூர் சரித்திரம் படைத்தார்.
ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், இதுவரையில் நடந்த போட்டிகளின் படி சீனா 42 தங்கம், 22 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கத்துடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையின் இன்று நடந்த பெண்களுக்கான Dinghy ILCA4 பாய்மர படகுப் போடியில் 17 வயதான நேஹா தாக்கூர் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
போபால் தேசிய படகோட்டம் பள்ளியிலிருந்து வளர்ந்து வரும் வீராங்கனையான நேஹா தாக்கூர், 32 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். நேஹாவின் மோசமான பந்தயம் ஐந்தாவது போட்டியாகும், அங்கு அவர் நிகர மதிப்பெண் 27 உடன் ஐந்து புள்ளிகளைப் பெற்றதோடு மொத்தமாக 32 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடித்தார்.
பதினொன்றாவது பந்தயங்களுக்குப் பிறகு மொத்தமாக 27 புள்ளிகளைப் பெற்ற அவர், பெண்கள் டிங்கி ILCA4 போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தாய்லாந்தின் நோப்பாசோர்ன் குன்பூஞ்சன் 16 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சிங்கப்பூரின் கெய்ரா மேரி கார்லைல் 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
ஒன்பதாவது பந்தயத்தில், தாக்கூர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், மேலும் பத்தாவது பந்தயத்திற்குப் பிறகு அவர் தனது நிலையை இரண்டாவதாக மேம்படுத்தினார், ஒட்டுமொத்த நேரத்தை 24:48 ஐ அடைந்தார். இதே போன்று ஆண்களுக்கான பாய்மர படகு போட்டியில் விஷ்ணு வரதன் 34 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். ஒரு புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் கொரியா வீரர் ஹா ஜீமின் வெள்ளி வென்றுள்ளார். மற்றொரு போட்டியில் ஆண்களுக்காக நடந்த windsurfer RS:X போட்டியில் ஈபத் அலி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.