Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த குதிரையேற்றத்தில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தங்கம் கைப்பற்றியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த குதிரயேற்ற பிரிவில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது. சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்ற அணிவகுப்பு போட்டியில் இந்தியா தங்களின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளனர். இன்று காலை 5.30 மணி நடந்த இந்தப் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது.
இதுவரையில் நடந்த போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கத்துடன் 14 பதக்கங்களுன் பதக்க பட்டியலில் 6 ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதற்கு முன்னதாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்தியா, 2ஆவதாக நேற்று நடந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கம் கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று குதிரையேற்றத்தில் 3ஆவது தங்கத்தை கைப்பற்றியுள்ளது. சீனா, 39 தங்கம், 21 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் 69 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளது. தென் கொரியா 10 தங்கம், 10 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கத்துடன் 33 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், ஜப்பான் 4 தங்கம், 14 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கத்துடன் 31 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது.