நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்: 14 பதக்கங்களுடன் இந்தியா 3ஆவது இடம்!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் 25ஆவது ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், தொடக்கம் முதல் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீரரான அபிஷேக் பால் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
இரண்டாவது நாளில் இந்திய வீராங்கனை ஜோதி பெண்கள் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார். அதேபோல இந்திய வீரரான அப்துல்லா ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அஜய் குமார் சரோஜ் என்பவரும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார்.
தப்பு கணக்கு போட்ட ராகுல் டிராவிட்: சுப்மன் கில் நம்பர் 3க்கு செட்டாவாரா?
ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலம் வெல்ல, தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் தஜீந்தர் தூர் ஷார்ட்புட் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல பருல் சவுத்ரி 300 மீட்டர் Steeple Chase போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் இந்திய வீரர் ஷைலு சிங் நீளம் தாண்டுதலில் வெள்ளி பெற்று அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதோடு, வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதே போன்று ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஷ்ரா, அமோஷ் ஜகோப் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் கொண்ட கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
இஷான் கிஷான் மீது கோபத்தில் ரோகித் சர்மா: அறிமுக டெஸ்டில் ஒரு ரன் எடுக்க 20 பந்துகளா?
இந்திய தடகள வீரர்களான அனில் சர்வேஷ் குஷாரே மற்றும் ஸ்வப்னா பர்மன் ஆகியோர் முறையே ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் மற்றும் பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். தமிழரசன் சந்தோஷ் குமார் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அஸ்வின் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனைகளின் பட்டியல்!
தற்போது வரையில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. ஜப்பான் 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்திலும், சீனா 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கத்துடன் 17 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 14 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்தியா!