ஆசிய தடகள சாம்பியன்ஷிப்.. தங்கத்தை குவிக்கும் இந்திய வீரர்கள் - பதக்கபட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்?
இன்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் தஜீந்தர் தூர் Shot Put போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்த வருடம் இந்தியா தொடக்க நாளிலிருந்து தங்களுடைய பதக்க வேட்டையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்க்காகில் தற்பொழுது நடைபெற்று வருகிறது 25வது ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள். நேற்று முன்தினம் இந்த போட்டிகள் துவங்கிய நிலையில் முதல் நாள் போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீரரான அபிஷேக் பால் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாம் நாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி பெண்கள் 100 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் தங்கம் வென்றார். அதேபோல இந்திய வீரரான அப்துல்லா ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அஜய் குமார் சரோஜ் என்பவரும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார்.
தப்பு கணக்கு போட்ட ராகுல் டிராவிட்: சுப்மன் கில் நம்பர் 3க்கு செட்டாவாரா?
ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலம் வெல்ல, தேஜாஸ்வின் சங்கர் ஒரு வெண்கலம் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் தஜீந்தர் தூர் ஷார்ட்புட் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல பருல் சவுத்ரி 300 மீட்டர் Steeple Chase போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் இந்திய வீரர் ஷைலு சிங் நீளம் தாண்டுதலில் வெள்ளி பெற்று அசத்தியுள்ளார்.
இதனால் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் ஒன்பது பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று 15 பதக்கங்களுடன் 2ம் இடத்திலும், ஜப்பான் 11 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை பெற்று 24 பதக்கங்களுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.