தப்பு கணக்கு போட்ட ராகுல் டிராவிட்: சுப்மன் கில் நம்பர் 3க்கு செட்டாவாரா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக நம்பர் 3 இடத்தில் இறங்கிய சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12 ஆம் தேதி டொமினிகாவில் உள்ள ரோசோ மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபீல்டர்களாக வலம் வந்த கிரிக்கெட் வீரர்கள்!
இதில், இந்தியா முதல் விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 103 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 17ஆவது வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ரோகித் சர்மா ஆட்டமிழந்தைத் தொடர்ந்து நம்பர் 3 இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். அவர் 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழந்து 312 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாராவை நீக்கி அவரது இடத்தில் சுப்மன் கில்லை இந்திய அணி களமிறக்கியது. இளம் வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் பவுலர்கள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், சுப்மன் கில் அந்த இடத்தில் நன்றாக விளையாடுவார் என்று கணிக்கப்பட்டது.
இதன் மூலமாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளிலும் 3ஆவது இடத்தில் சுப்மன் கில்லை களமிறக்கலாம் என்று ராகுல் டிராவிட் நினைத்துள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கில் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆட்டத்தை மாற்றக்கூடிய சக்தி அந்த 3ஆவது இடத்திற்கு உண்டு. இதுவரையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில்லின் இடத்திற்கு தற்போது இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வந்துவிட்டார்.
80 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரி அடித்து கொண்டாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
இந்த அணியும் ரைட் அண்ட் லெப்ட் காம்பினேஷனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தது. இனி வரும் காலங்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஓபனிங் வாய்ப்பு தான் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.