முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல், டிஎன்பிஎல், மகாராஷ்டிரா கிரிக்கெட் லீக் ஆகிய போட்டிகளைப் போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த லீக் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஆர்காஸ், வாஷிங்டன் ப்ரீடம், எம்.ஐ.நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் என்று மொத்தமாக 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஐபிஎல் சீசன்கள் மூலமாக பணக்காரர்களாக மாறிய டாப் 10 பிளேயர்ஸ் யாரெல்லாம் தெரியுமா?
இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் கேப்டன் சுனில் நரைன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து டெக்ஸாஸ் அணியில் டெவோன் கான்வே மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
80 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரி அடித்து கொண்டாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
இதில், டூப்ளெசிஸ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். கான்வே 55 ரன்களில் ஆட்டமிழந்தார். லஹிரு மிலந்த 17 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சான்ட்னர் 21 ரன்களில் வெளியேற, டிஜே பிராவோ 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் முதல் முன் வரிசை வீரர்கள் வரையில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜஸ்கரன் மல்ஹோத்ரா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆண்ட்ரூ ரஸல் 55 ரன்கள் சேர்த்து வெளியேறினார். சுனில் நரைன் 15 ரன்கள் எடுக்கவே மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 14 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் முகமது மொசின் 4 விக்கெட்டுகளும், தெரோன் மற்றும் கொயட்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் டிஎஸ்கே அணி எம்எல்சி தொடரில் முதல் வெற்றியை பெற்றது.