வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்ததோடு, வெஸ்ட் இண்டீஸில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 12 ஆம் தேதி டொமினிகாவில் தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தது.
இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்னுடனும், ரோகித் சர்மா 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் இருவரும் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், இருவரும் அரைசதம் அடித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் அரைசதத்தை கடந்து விளையாடினார். எனினும், ஒரு கட்டத்தில் 99 ரன்கள் இருந்த ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
3ஆவது இந்திய வீரர்:
இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17ஆவது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இதற்கு முன்னதாக, அறிமுக டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த இந்திய வீரர்கள்:
177 – ரோகித் சர்மா – கொல்கத்தா – 2013
134 – பிரித்வி ஷா – ராஜ்கோட் – 2018
100* - யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரோஸோவ் – டோமினிகா – 2023
இளம் வீரராக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர்கள்:
18 வருடம் 329 நாட்கள் – பிரித்வி ஷா – வெஸ்ட் இண்டீஸ் – ராஜ்கோட் – 2018
20 வருடம் 126 நாட்கள் – அப்பாஸ் அலி பேக் – இங்கிலாந்து, ஓல்டு டிரப்போர்டு - 1959
20 வருடம் 276 நாட்கள் – குண்டப்பா விஸ்வநாத் – ஆஸ்திரேலியா, கான்பூர் – 1969
21 வருடம் 196 நாட்கள் – வெஸ்ட் இண்டீஸ் -ரோஸோவ் – 2023
21 வருடம் 327 நாட்கள் – முகமது அசாரூதீன் – இங்கிலாந்து – கொல்கத்தா -1984
அறிமுக டெஸ்ட்: பவுண்டரி அடித்து அரைசதம் கடந்த யஷஸ்வி ஜெஸ்வால்: எழுந்து நின்று பாராட்டிய விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச ரன்கள்:
209* - ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரோசோவ் – 2023
201 - விரேந்திர சேவாக் – சஞ்சய் பங்கர் – மும்பை – 2002
159 – விரேந்திர சேவாக் – வாசீம் ஜாஃபர் – கிராஸ் இஸ்லெட், 2006
153 – சுனில் கவாஸ்கர் – சேத்தன் சௌகான் – மும்பை – 1978
136 – சுனில் கவாஸ்கர் – அன்ஷுமான் கெய்க்வாட், கிங்ஸ்டன் - 1976
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த தொடக்க வீரர்கள்:
187 – ஷிகர் தவான் – ஆஸ்திரேலியா – மொஹாலி, 2013
134 – பிரித்வி ஷா – வெஸ்ட் இண்டீஸ் – ராஜ்கோட் - 2018
100* - யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வெஸ்ட் இண்டீஸ் – ரோசோவ் - 2023
இதே போன்று, இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது 10ஆவது டெஸ்ட் போட்டி சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அதோடு, வெளி மண்ணில் அடித்த 2ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். தொடக்க வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் சதம் அடித்த 6ஆவது ஜோடி என்ற சாதனையை ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் படைத்துள்ளனர்.
கோலியை பார்த்து கத்துக்கிட்ட கத்துக்குட்டி: மைதானத்தில் ஜாலியான டான்ஸ் ஸ்டெப் போட்ட சுப்மன் கில்!
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். அவர் நின்னு நிதானமாக விளையாடி வருகிறார். விராட் கோலி 96 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 350 பந்துகளில் 14 பவுண்டரி உள்பட 143 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஜெஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் இந்த டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.