95 ரன் எடுத்தும் ஜெயிச்சு கொடுத்த மகளிர் டீம் இந்தியா: ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா 3, 3 விக்கெட்டுகள்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கோலியை பார்த்து கத்துக்கிட்ட கத்துக்குட்டி: மைதானத்தில் ஜாலியான டான்ஸ் ஸ்டெப் போட்ட சுப்மன் கில்!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 13 ரன்னிலும், ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரோட்ரிக்ஸ் 8 ரன்னில் வெளியேற, ஹர்மன் ப்ரீத் கவுர் டக் அவுட்டில் வெளியேற அடுத்து வந்தவர்களும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்கவே இந்தியா மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகள் - ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த சாதனைகள் ஏராளம்!
பின்னர், 96 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட வங்கதேச மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் ஷமீமா சுல்தானா 5 ரன்னிலும், ஷதி ராணி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முர்ஷிதா காதுன் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டனும், விக்கெட் கீப்பருமான நிகர் சுல்தானா 38 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்க எண்களில் வெளியேறவே வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச மகளிர் அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
பந்து வீச்சு தரப்பில் இந்திய மகளிர் அணி சார்பில் தீப்தி சர்மா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மின்னு மணி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பரேடி அனுஷ்கா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.