முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகள் - ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த சாதனைகள் ஏராளம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அதன்படி, டேகனரைன் சந்தர்பால் மற்றும் கிரேக் பிராத்வைட் இருவரும் களமிறங்கினர். இதில், இருவரும் நிதானமாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினர். முகமது சிராஜ் மற்றும் உனத்கட் இருவரும் 8 ஓவர்கள் வரையில் பந்து வீசினர். எனினும், விக்கெட் விழுவில்லை. போட்டியின் 9 ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு அஸ்வின் தனது 3 ஆவது ஓவரை வீசினார்.
ஜதாவேத் சுப்பிரமணி 4 விக்கெட், டிஎன்பிஎல் ஃபைனலில் நெல்லையை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
அந்த ஓவரின் 5ஆவது பந்தில் சந்தர்பால் கிளீன் போல்டானார். இதன் மூலமாக ஒரு இந்திய பவுலராக தந்தை மற்றும் மகனின் விக்கெட்டை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். ஆம், கடந்த 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிவ்நரைன் சந்தர்பாலை ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தற்போது அவரது மகன் சந்தர்பாலின் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதற்கு முன்னதாக தந்தை மற்றும் மகன் விக்கெட்டை கைப்பற்றியவர்கள்:
இயான் போத்தம் - லான்ஸ் மற்றும் கிறிஸ் கைர்ன்ஸ்
வாசீம் அக்ரம் - லான்ஸ் மற்றும் கிறிஸ் கைர்ன்ஸ்
மிட்செல் ஸ்டார்க் – சிவ்நரைன் சந்தர்பால் மற்றும் டேகனரைன் சந்தர்பால்
சிமோன் ஹெர்மெர் - சிவ்நரைன் சந்தர்பால் மற்றும் டேகனரைன் சந்தர்பால்
ரவிச்சந்திரன் அஸ்வின் - சிவ்நரைன் சந்தர்பால் மற்றும் டேகனரைன் சந்தர்பால்
அதன் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதில், அஸ்வின் மட்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதலில் இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
எனக்கு அது வேணாம், இது ஓகே; அடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் வீடியோ!
இதற்கு முன்னதாக,
அணில் கும்ப்ளே – 956 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் – 711 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் – 700 விக்கெட்டுகள்.
இதையடுத்து, அல்ஸாரி ஜோசப் மற்றும் ஜோமெல் வாரிக்கன் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்றவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக 33 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
அதோடு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் 5 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், ரவிச்சந்திரன் ஒரு அணிக்கு எதிராக எத்தனை முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்றால்,
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!
ஆஸ்திரேலியா – 7 முறை 5 விக்கெட்டுகள்
இங்கிலாந்து – 6 முறை 5 விக்கெட்டுகள்
நியூசிலாந்து – 6 முறை 5 விக்கெட்டுகள்
வெஸ்ட் இண்டீஸ் – 5 முறை 5 விக்கெட்டுகள்
தென் ஆப்பிரிக்கா - 5 முறை 5 விக்கெட்டுகள்
இலங்கை – 3 முறை 5 விக்கெட்டுகள்
வங்கதேசம் – ஒரு முறை 5 விக்கெட்டுகள்
இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தனக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 80 ரன்கள் எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோகித் சர்மா 30 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.