கோலியை பார்த்து கத்துக்கிட்ட கத்துக்குட்டி: மைதானத்தில் ஜாலியான டான்ஸ் ஸ்டெப் போட்ட சுப்மன் கில்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் சின்னதா ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகள் - ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்த சாதனைகள் ஏராளம்!
அதன்படி, டேகனரைன் சந்தர்பால் மற்றும் கிரேக் பிராத்வைட் இருவரும் களமிறங்கினர். இதில், இருவரும் நிதானமாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினர். முகமது சிராஜ் மற்றும் உனத்கட் இருவரும் 8 ஓவர்கள் வரையில் பந்து வீசினர். எனினும், விக்கெட் விழுவில்லை. போட்டியின் 9 ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு அஸ்வின் தனது 3 ஆவது ஓவரை வீசினார்.
அந்த ஓவரின் 5ஆவது பந்தில் சந்தர்பால் கிளீன் போல்டானார். இதன் மூலமாக ஒரு இந்திய பவுலராக தந்தை மற்றும் மகனின் விக்கெட்டை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதன் பிறகு ஒவ்வொரு விக்கெட்டாக சிறிது இடைவெளியில் விழவே வெஸ்ட் இண்டீஸ் அணி 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
போட்டியின், 63 ஆவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மைதானத்தில் பீல்டிங்கில் இருந்த சுப்மன் கில் மியூசிக்கிற்கு ஏற்றவாறு சின்னதா ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி மைதானத்தில் டான்ஸ் ஆடுவதும், ஆக்ரோஷமாக செயல்படுவதுமாக இருப்பார். அது டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டியாக இருந்தாலும் சரி, அந்த போட்டி ஹோம் மைதானத்திலும் நடந்த போட்டியாக இருந்தாலும் சரி, அவே போட்டியாக இருந்தாலும் சரி, டான்ஸ் ஆடுவது.
தற்போது அவரது வழியைப் பின்பற்றி, சுப்மன் கில்லும் சின்னதா ஒரு டான்ஸ் ஆடியுள்ளார். அந்த டான்ஸ் ஸ்டெப்பை பார்க்கும் போது பேட்ட படத்தில் ரஜினி ஆடும் டான்ஸ் ஸ்டெப் போன்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜதாவேத் சுப்பிரமணி 4 விக்கெட், டிஎன்பிஎல் ஃபைனலில் நெல்லையை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!