பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 9ஆவது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 20-22 மற்றும் 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு கிடைத்த 3 வெண்கலப் பதக்கமும் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மூலமாகவே வந்துள்ளது. நீச்சல், வில்வித்தை, ரோவிங், டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து பதக்கம் இல்லாமல் வெளியேறியுள்ளனர்.

Paris Olympics Hockey:பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா வெற்றி – இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இதே போன்று தான் பேட்மிண்டன் போட்டியிலும் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் லக்‌ஷயா சென் தவிர போட்டியிட்ட மற்ற அனைவரும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர். அதே போன்று தான் மகளிருக்கான தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டனர். கடைசியாக லக்‌ஷயா சென் மட்டுமே விளையாடினார்.

நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால் அனைவருக்கும் இலவச விசா – அட்லிஸின் நிறுவனர் மோஹக் நஹ்தா உறுதி!

இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டர் அக்சல்சென்னை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் லக்‌ஷயா சென் முதல் செட்டை 20-22 என்று இழந்தார். இதே போன்று 2ஆவது செட்டிலும் 14-21 என்று இழந்துள்ளார். இதன் மூலமாக தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறார். இறுதிப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த லீ ஜீ ஜியாவை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி நாளை 5ஆம் தேதி நடைபெறுகிறது.

குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் அதிர்ச்சி தோல்வி – பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேற்றம்!