Paris Olympics Hockey:பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா வெற்றி – இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் தற்போது முடிந்த ஹாக்கி போட்டியில் இந்தியா பெனால்டி ஷுட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் நீச்சல், ரோவிங், டென்னிஸ் ஆகிய போட்டிகளில் தோல்வி அடைந்து பதக்கம் இல்லாமல் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் 9ஆவது நாளான இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டியின் காலிறுதிப் போட்டி நடந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த காலிறுதிப் போட்டியானது பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது.
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால் அனைவருக்கும் இலவச விசா – அட்லிஸின் நிறுவனர் மோஹக் நஹ்தா உறுதி!
இதில், போட்டியின் 22ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். இது அவரது 7ஆவது கோல் ஆகும். இதைத் தொடர்ந்து 27ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லீ மோர்ஷன் ஒரு கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என்று சமனில் இருந்தன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதே போன்று இந்திய வீரர் சுக்ஜீத் சிங் ஒரு கோல் அடிக்கவே இரு அணிகளும் மீண்டும் 2-2 என்று சமனில் இருந்தது.
அதன் பிறகு இந்திய வீரர்கள் லலித் குமார் உபாத்யாய் ஷூட் அவுட் முறையில் ஒரு கோல் அடித்தார். ற்றும் ராஜ் குமார் பால் அடுத்து கோல் அடிக்கவே இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. இதில் இந்திய வீரர் அமித் ரோகிதாஸிற்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதன் காரணமாக இந்திய அணியானது 10 வீரர்களை கொண்டு விளையாடி அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. வரும் 6ஆம் தேதி அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.