கோ கோ உலகக் கோப்பை 2025: பிரதீக் வைக்கர், பிரியங்கா இங்கிள் தலைமையில் இந்திய அணிகள் அறிவிப்பு
ஜனவரி 13ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் கோ கோ உலகக் கோப்பைக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ஆண்கள் அணிக்கு பிரதீக் வைக்கரும், பெண்கள் அணிக்கு பிரியங்கா இங்கிளும் தலைமை தாங்குவார்கள்.
முதல் கோ கோ உலகக் கோப்பை போட்டி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் அணிக்கு பிரதீக் வைக்கரும், பெண்கள் அணிக்கு பிரியங்கா இங்கிளும் தலைமை வகிக்க உள்ளனர்.
இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 13 முதல் 19 வரை கோ கோ உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும். தொடக்க நாளில், இந்திய ஆண்கள் அணி நேபாளுக்கு எதிராகவும், பெண்கள் அணி ஜனவரி 14 அன்று தென் கொரியாவுக்கு எதிராகவும் விளையாடும்.
பெண்கள் அணிக்கு சுமித் பாட்டியாவும் ஆண்கள் அணிக்கு அஸ்வினி குமாரும் தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஓவரில் 29 ரன்கள் விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன்! வைரல் வீடியோ!
"முதல் உலகக் கோப்பை மற்றும் நான் பெண்கள் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். வரும் ஆண்டுகளில் கோ கோ வளரும். இளைஞர்கள் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுக்கள் அல்லது ஒலிம்பிக்கில் கூட விளையாட வாய்ப்புகள் கிடைக்கும்" என்று பிரியங்கா கூறியுள்ளார்.
"நான் கடந்த 24 ஆண்டுகளாக கோ கோ விளையாடி வருகிறேன், இறுதியாக இந்த நாள் வந்துவிட்டது. நான் என் அணிக்கு தலைமை தாங்குவேன். என் பெயர் அறிவிக்கப்பட்ட தருணத்தில், எனக்கு புல்லரிப்பு ஏற்பட்டது. என் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது. என் குடும்பம் இதற்காகப் பெருமைப்படும்" என்று பிரதீக் தெரிவித்துள்ளார்.
இந்திய கோ கோ கூட்டமைப்பின் தலைவர் சுதன்ஷு மிட்டல், கோ கோ உலகக் கோப்பையின் தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் விக்ரம் தேவ் டோக்ரா ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அணிகளின் ஜெர்சிகளின் சிறப்பு அம்சத்தையும் மிட்டல் வெளியிட்டார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் "பாரத்" லோகோவுடன் விளையாட உள்ளனர். "ஜெர்சியில் 'பாரத்’ முக்கியமாக இடம்பெறும். இந்திய அணி 'பாரத் கி டீம்' என்று அழைக்கப்படும்" என்று மிட்டல் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பெண்கள் பிரிவின் வெற்றியாளருக்கான கோப்பை வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. "தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களை கௌரவிக்கும் வகையில் பச்சை நிற கோப்பை வழங்கப்படும்" என்று கோ கோ உலகக் கோப்பையின் தலைமை இயக்க அதிகாரி கீதா சுதன் கூறினார்.
பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்! இந்த எல்ஐசி திட்டத்தில் சேருங்க!
கோ கோ உலகக் கோப்பை 2025: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள்