பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்! இந்த எல்ஐசி திட்டத்தில் சேருங்க!
LIC Bima Sakhi Scheme: எல்ஐசியின் பீமா சகி திட்டம் பெண்களை பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக மாற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் இதன் மூலம் பயன் பெறலாம்.
LIC Bima Sakhi Yojana
எல்ஐசியின் பீமா சகி திட்டம்
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான எல்ஐசியின் பீமா சகி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 9 டிசம்பர் 2024 அன்று தொடங்கினார். ஒரே மாதத்தில் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். எல்ஐசியின் பீமா சகி திட்டம், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
LIC Bima Sakhi Scheme stipend
எல்ஐசியின் பீமா சகி திட்டம் என்றால் என்ன?
இத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு, எல்ஐசி முகவர்களாக மாற சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற பீமா சகி பெண்களுக்கு எல்ஐசி முதல் 3 ஆண்டுகளுக்கு சம்பளம் அல்லது உதவித்தொகையை வழங்கும். பயிற்சியை முடித்த பிறகு, பெண்கள் எல்ஐசி முகவர்களாக பணியாற்றலாம். பட்டப்படிப்பை முடித்த பிறகு எல்ஐசியில் டெவலப்மென்ட் அலுவலராக வாய்ப்பு கிடைக்கும்.
LIC Bima Sakhi Scheme monthly income
14 ஆயிரம் பெண்கள்:
திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், பீமா சகி திட்டத்தில் பதிவுசெய்தவர்கள் எண்ணிக்கை 52,511ஐ எட்டியுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. இவர்களில் 27,695 பேர் பாலிசிகள் விற்பனை செய்ய நியமனக் கடிதங்கள் பெற்றுள்ளனர். 14,583 பேர் பாலிசிகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
LIC Bima Sakhi Scheme commission
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு பீமா சகி:
“ஒரு வருடத்திற்குள் நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஒரு பீமா சகியையாவது பணியமர்த்துவது எங்கள் நோக்கம். எல்ஐசி அவர்களுக்குத் தேவையான திறன் பயற்சி வழங்கி தயார்படுத்துகிறது. டிஜிட்டல் கருவிகள் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது" என எல்ஐசி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த் மொஹந்தி கூறுகிறார்.
LIC Bima Sakhi Scheme target
2 லட்சம் பீமா சகி இலக்கு:
அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் பீமா சாகி முகவர்களை நியமிக்க எல்ஐசி இலக்கு வைத்துள்ளது. பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
LIC Bima Sakhi Scheme benefits
எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும்?
எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.6000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர, பெண் முகவர்கள் காப்பீட்டு பாலிசிகளின் அடிப்படையில் கமிஷன் பெறலாம்.
LIC Bima Sakhi Scheme conditions
யார் இத்திட்டத்தில் சேர முடியாது?
தற்போதுள்ள முகவர் அல்லது பணியாளரின் உறவினர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது. அதாவது இப்போது எல்ஐசி முகவராக இருப்பவரின் மனைவி, தத்தெடுக்கப்பட்ட மற்றும் வளர்ப்புப் பிள்ளைகள் (சார்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்), பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள், மாமியார் உள்பட உறவினர்கள் யாரும் இத்திட்டம் மூலம் பலனடைய முடியாது. மாநகராட்சியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கோ அல்லது மறு நியமனம் கோரும் முன்னாள் முகவர்களுக்கோ இத்திட்டத்தின் கீழ் ஏஜென்சி வழங்கப்படாது.
தற்போதுள்ள முகவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
How to apply for LIC Bima Sakhi Scheme
எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தில் சேர அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சுய சான்றளிக்கப்பட்ட வயது சான்றிதழ் நகல், முகவரிச் சான்று நகல், கல்வித் தகுதிச் சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.