எஃப்.ஐ.எச் புரோ லீக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், 2 கோல் அடித்த தமிழக வீரர் செல்வம் கார்த்திக்கும் திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். 

எஃப்.ஐ.எச் புரோ லீக்கில் இந்திய ஹாக்கி அணி சிறப்பாக ஆடிவருகிறது. இந்தியா - ஜெர்மனி இடையேயான பரபரப்பான போட்டியில் இந்திய அணி 6-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த போட்டியின் 3வது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி முதல் கோல் அடித்தது. முதல் கோலை ஜெர்மனி அணி அடித்திருந்தாலும் அதன்பின்னர் அந்த அணி மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது.

WPL 2023: அட கொடுமையே... ஆர்சிபிக்கு தொடர்ச்சியாக 5வது தோல்வி..! டெல்லி கேபிடள்ஸ் வெற்றி

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜுக்ராஜ் கோல் அடிக்க, அடுத்த நிமிடத்தில் 2வது கோலை அடித்தார் அபிஷேக். 23 மற்றும் 31வது நிமிடங்களில் ஜெர்மனி அணி கோல் அடிக்க, 24வது நிமிடத்தில் இந்தியாவிற்கு கோல் அடித்து கொடுத்த தமிழக வீரர் செல்வம் கார்த்தி, மீண்டும் 46வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். 

ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் அபிஷேக் மீண்டும் ஒரு கோல் அடிக்க, கடைசியில் 6-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

எல்லா டீமும் பாகிஸ்தானுக்கு வரும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? PCB தலைவர் கேள்வி

இந்திய ஹாக்கி அணியின் அபாரமான வெற்றிக்கும், 2 கோல்களை அடித்து வெற்றிக்கு உதவிய தமிழகத்தை சேர்ந்த ஹாக்கி வீரரான செல்வம் கார்த்திக்கும் திமுக எம்பி கனிமொழி டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். 

Scroll to load tweet…
Scroll to load tweet…